பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களோடு முறைப்பாடுகளை பதியவரும் சிறுவர் ,சிறுமிகளின் நன்மை கருதி -சிறுவர் பூங்கா

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கைப் பொலிஸ் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் படை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வாவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களோடு முறைப்பாடுகளை பதியவரும் சிறுவர் ,சிறுமிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் பூங்காவொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வாவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இச் சிறுவர் பூங்காவை காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திற்கு வரும் சிறுவர் ,சிறுமிகள் முழுமையாக பயன்படுத்த முடியுமெனவும் சிறுவர்களின் நன்மை கருதியே மேற்படி சிறுவர் பூங்கா நிறுவப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன மேலும் தெரிவித்தார்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment