குபா ஜும்ஆ பள்ளியை அண்டிய பகுதியில் இடம் பெறவுள்ள மாபெரும் சிரமதான நிகழ்வு

unnamed (5)எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை மற்றும் சியாட் பௌண்டேசன் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான நிகழ்வொன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21 ம் திகதி) சுபஹ் தொழுகையின் பின்னர் காத்தான்குடி 4ம் குறிச்சி குபா ஜும்ஆ பள்ளியை அண்டிய பகுதியில் இடம் பெறவுள்ளதாக காத்தான்குடி செஞ்சிலுவைச் சங்க தலைவர் எம்.எஸ்.எம. அப்துள்ளாஹ் தெரிவித்தார்.

இச் சிரமதான நிகழ்விற்கு பொது மக்கள் தங்களிடமுள்ள கத்தி, குப்பை வாரி, ஈர்க்குத்தடி போன்ற சுத்தப்படுத்தும் பொருட்களைக் கொண்டு வந்து உதவுமாறும் இந்நிகழ்விற்கு செஞ்சிலுவைச்சங்க தொண்டர்கள், சியாட் பௌண்டேசன் உறுப்பினர்கள் கி.சே.உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்,164 ஏ மாதர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்பகுதியில் நகர சபையினால் ஒரு பகுதியில் குப்பை கொட்டப்படுகின்ற போதிலும் ஒரு சிலரின் கவனயீனம் காரணமாக வீதியோரங்களில் இரவு வேளைகளில் குப்பைகள் ஆங்காங்கே போடப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஜும்ஆப்பள்ளிவாயல், பாடசாலைகள், வாசிகசாலை, பாலர் பாடசாலை போன்றவை இப்பகுதியில் அமைந்துள்ளதுடன் உடற் பயிற்சிக்காக ஆண்களும் பெண்களும் இவ்வீதியை பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment