காத்தான்குடிப் பிரதேசத்திற்கான நிரந்த புதிய பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் நியமிக்கப்படாமை குறித்து பிரதேச விளையாட்டுக் கழகங்கள் விசனம்

DS Office-1– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்திற்கான பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் இட மாற்றம் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் கடந்தும் நிரந்த புதிய பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் நியமிக்கப்படாமை குறித்து காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

காத்தான்குடிப் பிரதேசத்திற்கான பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தராக தற்காலிகமாக ஏறாவூர் பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் ஜெலீல் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளகுவதாகவும் தெரிவித்ததுடன் இரண்டு பிரதேச செயலகத்திற்கு ஒரு பிரதேசவிளையாட்டு உத்தியோகத்தர் இல்லாமல் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு ஒரு தனியான பிரதேச விளையாட்டு உத்தியோகத்தரை மிக விரைவில் நியமிக்குமாறும் இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத் கமகே ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,காத்தான்குடிப் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் ,அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Published by

Leave a comment