மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 1,568 மில்லியன் ரூபா

hizbullaகாத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்ச்சு 1,568 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் வகையில் நேற்று (17)காத்தான்குடியிலுள்ள பிரதியமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில்  நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

 இதன்போது இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. இந்த நிதி மாவட்டத்திலுள்ள 345 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டும் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
 

இந்த நிதியின் மூலம் சுகாதாரம், குடிநீர், சுற்றுல்லாதுறை, தொழில் கல்வி, விவாசயம், சிறிய நீர்ப்பாசனம், மீன்பிடி, உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், ஏறவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் எம்.ஹமீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.lk

Published by

Leave a comment