சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு அஹதிய்யா சீருடை வழங்கும் வைபவம்

2-DSCN0708[1]– பழுலுல்லாஹ் பர்ஹான், றிஸ்கான் முஹம்மட்

சாய்ந்தமருது: கல்முனை -சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் 2014ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு சீருடை வழங்கும் வைபவம் கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 16.02.2014 நேற்று ஞாயிற்றுக் கிழமை அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலையின் தலைவர் மௌலவி ஏ.அன்சார்(தப்லிஹி) தலைமையில் நடைபெற்றது.

இதன் போது அல்-ஹிலால் அஹதிய்யா பாடசாலை 40 மாணவ ,மாணவிகளுக்கு அதிதிகளினால் அஹதிய்யா சீருடை வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் மௌலவி எம்.மர்சுக் ,சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபை முன்னால் செயலாளர் மௌலவி ஏ.எல்.தௌபிக் நளீமி ஆகியோர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது அல்-ஹிலால் அஹதிய்யாவின் அதிபர் முஹம்மட் ஸம்சுல் முனா மற்றும் அஹதிய்யாப் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

2-DSCN0708[1]

4-DSCN0688[1]

 

Published by

Leave a comment