ரியாத்: சவூதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது.
ஜாபர்த்தி இந்தப் பதவியைத் தனது திறமையால் பெற்றிருக்கிறார் , அவர் ஒரு மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பத்திரிகையாளர் என்று அவரைப் பற்றி தற்போதைய ஆசிரியர் காலெத் அல்மயீனா வர்ணித்திருக்கிறார்.
பெண்கள் இது போன்ற தொழில் இடங்களில் வளர்வதற்கு இருந்த ஒரு “கண்ணாடிக் கூரை”யில் ( உச்ச வரம்பு) ஒரு விரிசல் ஏற்படுத்தப்பட்டுவிட்டது, அது உடைக்கப்பட்டுவிட்டது என்ற் ஜாபர்த்தி கூறியிருக்கிறார்.
சவூதி அரேபியாவில், பெண்கள் ஆண்களுக்கு சரி சமமாக வேலை செய்வதை பல அதி தீவிர பழமைவாத முஸ்லீம் மதகுருமார்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
– BBC Tamil
Published by

Leave a comment