‘வன்னி மக்களின் தலைவர் அமைச்சர் றிஷாத்’ – ஜயதிலக

jayathilaka north– இர்ஷாட் ரஹ்மதுல்லா

இக்கிரிகொல்லாவ: இன்று வன்னி மாவட்ட மக்களுக்கு சிறந்த பணிகளை ஆற்றக் கூடிய ஒருவராக அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்படுவதால், அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் தலைவராக அல்லாமல் வன்னி மாவட்டத்தில வாழும், ஏனைய சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக மாறியுள்ளார் என்று வட மாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக்க தெரிவித்தார்.

வடமத்திய மாகாண சபைக்குட்பட்ட இக்கிரிகொல்லாவ சாளம்பை புர பாடசாலையில் இடம் பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது –

யுத்தத்தால் வடக்கில் வாழ்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பாதிப்புக்களை சந்தித்தனர்.அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்.இந்த வெளியேற்றத்தினால் இழந்தவைகள் ஏராளம்.கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் சமாதானம் ஏற்படுத்தப்பட்டதனால் மீண்டும் மக்கள் மீள்குடியேறியுள்ளனர்.இந்த சூழ் நிலையில் எமக்கான அளப்பரிய சேவைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ளார்.

அவர் தொடர்பில் சிலர் இனவாதம் பேசுகின்றனர்.அவரிடத்தில் அவ்வாறான சிந்தணையில்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதனை இடைவிடாது செய்துவரும் ஒரு சிறந்த தலைவர்.2013 இல் நடை பெற்ற வடமாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பட்டடியிலில் போட்டியிட்ட சிங்கள சமூகத்தை சேர்ந்த என்னை வெற்றி பெறச் செய்துள்ளார்.முஸ்லிம் மக்கள் எனக்கும் வாக்களித்தனர் என்பதை இங்கு நன்றியுணர்வுடன் நினைவு கூர்கின்றேன்.

உலகில் உள்ள 1.8 பில்லியன் முஸ்லிம்களில் ஆளுமை,சிறந்த தலைமைத்துவம், இனத்துவ ஒற்றுமை என்பன தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் எமது வன்னியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனும் தெரிவு செய்யப்பட்டமை இந்த நாட்டுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷமாகும்.அதே போல் வன்னி மாவட்ட மக்கள் மத்தியில் பெருமையினை இது ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இந்த அமைச்சரின் அபிவிருத்தி பணிகளுக்கு வடமாகாண சபையில் இருக்கும் வன்னி மாவட்ட 3 உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் என்றும் இருக்கின்றது என்றும் மாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக்க கூறினார்.

Published by

Leave a comment