இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களும்…அதற்கான தீர்வை நோக்கிய பயனமும்..

-டீன் பைரூஸ்-

urrrகாத்தான்குடி.எமது நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் ஹிழுர் ஜும்ஆ பள்ளிவாயலிலும்,புதிய காத்தான்குடி 06, அப்ரார் பள்ளிவாயலிலும்  இடம்பெறவுள்ளது.

புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயலில்  சென்ற (14.02.2014 வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின பின் கூட்டம் நடைபெற்றது.சம்மேளனத்தின் சார்பாக அதன் பிரதி தலைவர் எம்.சுபைர்.jp,பிரதிச் செயலாளர் ALZ பஹ்மி BA, எம்எம்.ஹில்மி, கிராம உத்தியோகஸ்தர் YLMஇப்றாஹீம் GN ,அப்ரார் பள்ளிவாயலின் தலைவா் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சம்மேளன மற்றும் கிராம உத்தியோகத்திரினால் மீழ் குடியேற்றம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக தங்களது சொந்த மண்ணை விட்டு வெளியேறி இன்றும் இடம் பெயர்ந்து வாழும் இருநுறுவில் உண்ணிச்சை, கீச்சாம் பழம் ,ஒல்லிக்குழம்,சிகரம்,மண்முனை உட்பட வடக்கு,கிழக்கு மக்களின் சொந்த காணிகளில் இன்றும் சுதந்திரமாக சென்று குடியமர முடியாத ஒரு கசப்பான நிலமையே காணப்படுகின்றது.

இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு எந்த ஒரு தரப்பினராவும் ஒரு நிரந்தர தீர்வையேனும் பெற்றுக் கொடுக்காத நிலையில் உலக நாடுகளின் (ஜெனீவா) பாரிய அழுத்தம் காரணமானக அதற்கான நல்ல வாய்ப்பு ஒன்று கிடைக்கக் கூடிய நிலமை உருவாகியுள்ளது.

முஸ்லிம்களில் காணி தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆனைக்குழுவின் (LLRC) LESSONS LERNT RECONCILIATION COMMISSION இன் பரிந்துரைகள் மிகவும் சாதகமாவே காணப்படுவதானால் 1989 இலிருந்து யுத்தம் காரணமாக இன்று வரை இடம் பெயர்ந்து வாழும் ஒவ்வெரு குடும்பத்தினரும் இது விடயத்தில் மிகவும் அக்கரையோடு செயல்பட வேண்டும்.சொந்த காணிகளை மீட்டெடுக்க முஸ்லிம் தலைமைகளுடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  

மீழ் குடியேற்றம் தொடர்பில் சிங்கள்,தமிழ் சமூகம் காட்டுகின்ற ஆக்க புர்வமான அக்கறைகள் போன்று எமது மக்கள் அக்கறை காட்ட வில்லை என்பதுடன் இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் குடியேற வில்லையேனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

அரசன் அன்டறுப்பான் தெய்வம் நின்றறுப்பான்.

DSC00185DSC00186DSC00180DSC00181

.

Published by

Leave a comment