காத்தான்குடி: இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ‘சுன்னத் வல் ஜமாஅத்’ இயக்கத்தினரின் இரும்புத்தளமாக வர்ணிக்கப்படும் காத்தான்குடி 5, பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் இன்று 14-02-2014 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை மீண்டும் ஆரம்பமானது.
2004ம் ஆண்டு காத்தான்குடியில் ஏற்பட்ட ‘ஈமானியப் போராட்ட’த்தின் பின்னர், குறித்த பள்ளிவாயலில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜூம்ஆ தொழுகை மீண்டும் இன்று ஆரம்பமானது.
மீண்டும் ஜூம்ஆ தொழுகை ஆரம்பமாவதை முன்னிட்டு செய்குனா மௌலவி அப்துல் ரஊப் மிஸ்பாஹி அன்னவர்களது ஆதரவாளர்கள் புத்தாடைகள் அணிந்து இந்த ஜூம்ஆ தொழுகையில் கலந்து சிறப்பித்தனர்.
கொழும்பிலிருந்தும், நாட்டின் ஏனைய பாகங்களிலிருந்தும் மற்றும் ஊரிலிருந்தும் பல பிரமுகர்கள் இந்த ஜூம்ஆ தொழுகையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.
பள்ளிவாயல் கட்டடப் பணிகள் நிறைவடைந்ததும் ஜூம்ஆ ஓதலாம் என காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா அனுமதி வழங்கியமைக்கு ஏதுவாக இந்த ஜூம்ஆ தொழுகை இன்று காத்தான்குடி பத்ரிய்யாப் ஜூம்ஆ பள்ளிவாயலில் மிக விமர்சையாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment