ஓமந்தை நொச்சிமோட்டை பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தின் திறப்பு விழா

unnamed (3)இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்

வவுனியா: முள்ளி வாய்க்காலில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா வந்த மாணவர்கள் சிறந்த பெறுபேருகளை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக கொழும்பில் உள்ள ரோயல் கல்லுாரி, இந்து கல்லுாரி, சாஹிரா கல்லுாரியில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை அழைத்து வந்து கற்றல் செயற்பாடுகளுக்கு உதவி செய்தேன். எனது பார்வையெல்லாம் வன்னி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் இந்த நாட்டில் அதி உயர் பதவிகளில் அமரவேண்டும் என்பதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் ஓமந்தையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக்கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலக்க ஆளுநரின் ஆணையாளர் சாஹிப் மொஹிதீன், வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி உள்ளிட்ட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் –

வடக்கில் வாழ்ந்த மக்கள் அனுபவித்த துன்ப இதுயரங்களை எமக்கு எவரும் புதிதாக சொல்லித்தர வேண்டியது இல்லை.இந்த மக்களுடன் நெருக்கமான உறவினை கொண்டவன் என்ற வகையில், இம்மக்களது வாழ்வாதார மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் அதிகமாக அறிந்தவன்.இந்த மக்களுக்கு எதையெல்லாம் பெற்றுக் கொடுக்க முடியுமோ அதற்கான அனுமதியினை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையில் வழங்கிவந்துள்ளேன்.

நாம் இன ரீதியாக சிந்திப்பவர்கள் அல்ல, கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதனை நான் பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு சமூகத்திற்கு மட்டும் பெற்றுக் கொடுக்க முடியாது. அதனை இந்த மண்ணில் வாழும் மாணவ சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த கல்வியினை பெற்றுக் கொடுக்க வலயக் கல்வி பணிப்பாளர் தொடக்கம் பெற்றோர்கள் வரை தமது அர்ப்பணங்களை செய்ய வேண்டும். எமது மண்ணின் மாணவ சமூகம் நாளை கற்றவர்களாக அதன் மூலம் எதிர் கால சமூகத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அன்று இடம் பெயர்வுடன் வவுனியா வந்து மெனிக் பார்ம் முகாமில் பராமறிக்கப்பட்ட மாணவர்கள் இன்று சிற்நத பெறுபேருகளை பெற்று பல பதவிகளில் இருக்கின்றனர். அவர்கள் என்னை சந்திக்கின்ற போது அந்த நிகழ்வுகளை மீட்டிப்பார்ப்பார்கள், அந்த சந்தரப்பங்களில் நாம் பெரும மகிழ்ச்சியடைவேன்.

கற்றல் செயற்பாடுகளுக்கு பள்ளிக் கூடங்களின் இயற்கை தன்மை மிகவும் முக்கியமாகும்.அதனது அமைப்பு மற்றும் போதுமான கட்டிட வசதிகள் என்பன இதில் பிரதானமானதாக இருக்கின்றது. இந்த வகையில் இந்த பாடசாலைக்கு இரு மாடிக்கட்டிடம் பெற்றுக் கொள்ளப்பட்டதானது ஒரு பதிவாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீ்ன் இங்கு கூறினார். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment