காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 13-02-2014 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் விவேகானந்தினால் பரிசோதிக்கப்பட்ட தமிழ்,முஸ்லிம் ,சிங்கள மதங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,ஊடகவியலாளர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இவ் இரத்ததான நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன,மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கி உத்தியோகத்தர்கள்,தாதிகள்,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment