விஸ்தரிக்கப்பட்டுவரும் காத்தான்குடி ஆதார லைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு

hospital16– விசேட நிறுபர்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கிவந்த 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) தற்போது மேலும் சிறந்த வசதிகளுடனான சேவைகளை வழங்கும் வகையில் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.

ஏற்கனவே, இந்த ETU, 03 கட்டில்களுடன் மாத்திரம் குறுகிய இடத்தில் சேவையினை வழங்கி வந்தது. எமது பகுதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் திடீர் விபத்துக்கள் மற்றும் மாரடைப்பு போன்ற அவசர சிகிச்சைகளுக்காக வரும் நோயாளர்களுக்கு மேலும் சிறந்த சேவையினை வழங்கும் வகையில்;  06 கட்டில்களைக் கொண்டதாக ETU வுடன் தீவிர கண்காணிப்பு பிரிவையும் (ICU) சேர்ந்த வகையில்  விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

jabir doctor
வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர்

தற்போது இவ் வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதால் இன்ஷா அல்லாஹ் இந்த மாத இறுதிக்குள்  மீண்டும் மேலதிக வசதிகளுடன் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்று வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் MSM. ஜாபிர் தெரிவித்தார்.

hospital3

இவ் விஸ்தரிப்பு வேலைகளுக்காக  எமது ஊரின் நலன்விரும்பிகளும் தாராளமனங்கொண்டவர்களும் பங்களிப்புக்களை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

hospital11

Published by

Leave a comment