இங்கிலாந்து பாடசாலையில் மாணவிகள் ‘ஸ்கேர்ட்’ அணிய தடை

12-skirts--300– S-90

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள பாடசாலை ஒன்று மாணவிகள் ஸ்கேர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள  உயர் நிலைப் பாடசாலையில் படிக்கும் மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மாணவிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட குட்டி குட்டியாக ஸ்கர்ட் அணிந்து வருகிறார்கள். இதனால் தான் பள்ளி நிர்வாகம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த தடை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு சில பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மாணவிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் ‘ட்ரவ்ஸ்ர்’ அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும். ட்ரவ்ஸ்ர் வாங்க கஷ்டப்படும் பெற்றோருக்கு பள்ளி நிதியுதவி அளிக்கின்றது.

மேலும் 7 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு மேக்கப் போட்டு வரவும் தடைவிதிக்கப்படுகிறது.

Published by

Leave a comment