புலிக்கும் சிங்கத்துக்குமான சவால் இன்று

Banglades-srilanka– MJ

சிட்டாகொங்: பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபது20 போட்டியின் முதலாவது போட்டி இன்று பங்களாதேஷ் சிட்டாகொங் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது.

பங்களாதேஷ-இலங்கை அணிகளுக்கிடையில் இதுவரை இரண்டு சர்வதேச இருபது2 போட்டிகள் இடம்பெற்றிருக்கின்றன. முதலாவது போட்டி செப்டம்பர் 18இ 2007 இல் ஜொஹன்ஸ் பேர்க்கில் இடம் பெற்றிருந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இவ்விரு நாடுகளுக்குமிடையில் இறுதியாக மார்ச் 31, 2013ல் பல்லேகலே மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டியிலும் இலங்கை அணி 17 ஓட்டங்களால்  வெற்றிபெற்றிருந்தது.

Banglades-srilanka

புலிக்கும் சிங்கத்துக்கமிடையிலான ஓர் விறுவிறுப்புப் போட்டியாக இருபது 20 தொடரும், ஒரு நாள் தொடரும் காத்திருக்கின்றன.

வங்கதேச மண்ணில் 2012 இல் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் மிகத் திறமையாக விளையாடி இறுதிப்போட்டிவரை மிகச் சிறப்பாக விளையாடி இருந்தது.

வங்க மண்ணில் இருபது20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் இலங்கை அணிக்கு ஓர் சவாலாகவே அமையும்.

Published by

Leave a comment