சாய்ந்தமருது: இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் ஒழுங்கு செய்திருந்த எடின்ப்றோ சர்வதேச இளைஞர் விருத்தித்திட்ட நிகழ்வும் , விஷேட கற்கை நெறிக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதி தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளான எஸ்.எம்.ஏ.லத்திப், ஏ.ஆல்தீன் ஹமீர் மற்றும் மாளிகைக்காடு ஜும் ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உள்ளிட்டோர் அதிதிகளினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு எடின்ப்றோ சர்வதேச இளைஞர் விருத்தித்திட்டத்தில் இணைந்து கொண்ட 12 இளைஞர் கழகத் தலைவர்களுக்கு நியமனக்கடிதங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலினால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு 220 இளைஞர்களுக்கு நெசனல கணனி அறிவகத்தில் இலவச கணனி, ஆங்கிலம் போன்ற விஷேட கற்கை நெறியை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் என். ஆரிப், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும் ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா, இலங்கை மின்சார சபை கல்முனைப் பிராந்தியப் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், சாய்ந்தமருது இளைஞர் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment