காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையில் தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் க.பொ.த.(சா/த) க.பொ.த.(உ/த) மற்றும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது
உதவி பிரதேச செயலாளர் ஏ. சி. அஹமட் அப்கர் தலைமையில் இடம்பெற்ற. .இக் கருத்தரங்கில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்மி தாஜூத்தீன், சிலியட் மாவட்ட இணைப்பாளர் ஐயபாலன் நய்ட்டா மாவட்ட முகாமையாளர் சாலிம் மௌலானா மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ரம்ஸின் ஆகியோரினால் விரிவுரைகள் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் தாம் எத்தகைய துறையை தேர்ந்தெடுப்பது அத் தொழில் முயற்சியை மேற்கொள்ளும்போது எவ்வாறு திட்டமிட்டு மேற்கொள்வது தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
Published by
![DSCF6373[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf63731.jpg?w=150&h=112)
![DSCF6374[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf63741.jpg?w=780&h=585)
![DSCF6375[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf63751.jpg?w=780&h=585)
![DSCF6373[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf63731.jpg?w=780&h=585)
Leave a comment