பக்தாத்: ஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் முகாமில் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே 20 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 தீவிரவாதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஈராக்கின் வடக்கு பக்தாத்தில் உள்ள தீவிரவாத முகாமியில் தற்கொலை தீவிரவாதிகளுக்கு குண்டு வெடிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. எதிர்பாராத விதமாக பயிற்சியாளரின் கவனக் குறைவால் குண்டு வெடித்துவிட்டது.
இந்தக் குண்டுவெடிப்பில் முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 20 தீவிரவாதிகள் பலியானார்கள்.மேலும், 15 தீவிரவாதிகள் படுகாயமடைந்தார்கள். குண்டு வெடித்த சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற ராணுவத்தினர் அங்கு ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அங்கிருந்து தப்பித்து ஓட முயன்ற 8 தீவிரவாதிகளை அவர்கள் கைது செய்துள்ளனர்.
‘இந்த சம்பவம் கேலிக்குறியது, மற்ற பயிற்சிகளைப்போல் குண்டுவெடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்’ என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த 20 தீவிரவாதிகளின் மரணத்தால் உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், வாளை எடுத்தவனுக்கு வாளாலேயெ மரணம் என்பதை நிரூபிப்பது போல அமைந்துள்ளது இந்தச் சம்பவம் என்பதாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.
(காப்பகப் படம்)
Published by
![21-bomb-blast-pics1-600[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/21-bomb-blast-pics1-6001.jpg?w=150&h=112)
Leave a comment