‘நெணச TV’ நிகழ்ச்சித் திட்டம் கிழக்கு மாகாணத்தில் அங்குரார்ப்பணம்

 unnamed (1)MTM.Shareek (Teacher)

திருகோணமலை: கல்வியமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் Dialog இணைந்து ‘இலங்கையில் எங்கள் மாணவர்கள் அனைவருக்கம் சமமான கல்வி’ எனும் தொனிப் பொருளில் அறிமுகப்படுத்தியுள்ள நெணச TV நிகழ்ச்சித் திட்டத்தின் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு நேற்று (08.02.2014) திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் பிரதியமைச்சர் MKDS. குணவர்த்தன, Dialog நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷியாம் மஜீத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் DM. சரத் அபேகுணவர்த்தன, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் MTA. நிஸாம், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் WMNJ. புஷ்பகுமார மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் நெணச திட்டத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  

unnamed

இந்நிகழ்ச்சித் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 121 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதில் காத்தான்குடிப் பிரதேசத்தில் காத்தான்குடி மத்திய கல்லூரி, மீரா பாலிகா தேசிய பாடசாலை, அல்ஹிறா வித்தியாலயம், அல்அமீன் வித்தியாலயம், ஸாவியா வித்தியாலயம் மற்றும் அந்நாஸர் வித்தியாலயம் ஆகிய 06 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இப்பாடசாலைகளுக்கும் 32” LCD தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. 

unnamed (1)

 

Published by

Leave a comment