துபாய்: துபாயில் உள்ள இலங்கை தூதுவராதலயமும் துபாய் வாழ் இலங்கை கிரிக்கட் அமைப்பும் சேர்ந்து இலங்கை கிரிக்கட் வீரர்களை கௌரவிக்கும் முகமாக அன்மையில் ஒரு பாராட்டு விழாவினை Palm Jumeirah Atlantic நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்து இருந்தது.
மிக விமர்சையாக இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூ, மகேல ஜயவர்த்தன, குமார் சங்கக்கார மற்றம் தேசிய கிரிக்கட் அணியின் சகல வீரர்களும் கலந்து கொண்டனர்.
துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதித்திதூதுவர் எம்.எம்.அப்துல் றஹீம், இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு செயலாளர் நிசாந்த ரணதுங்க உட்பட துபாயில் உள்ள கிரிக்கட் துறையோடு தொடர்புடைய உயர் பிரதி நிதிகள், அதிகாரிகள் மற்றும் சார்ஜா கிரிக்கட் மைதானத்தின் உரிமையாளர் அஷ் சேக் புகாதீர் முகம்மட் என பல்வேறு பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Published by

Leave a comment