கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்து நடாத்திய உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச வழிகாட்டல் கருந்தரங்கு

unnamed (1)பழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதன் முறையாக இளைஞர்களின் உள்ளத்துணர்வுகளை அறிந்து கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்து நடாத்திய கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச வழிகாட்டல் கருந்தரங்கு 08.02.2014 நேற்று சனிக்கிழமை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மன்டபத்தில் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் நடை பெற்றது.

இவ்வைபவத்தின் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.சுபைர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். பீர்முஹம்மத் (காஸிமி) மற்றும் இளைஞர் சேவை அதிகாரி கனீபா உள்ளீட்ட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது சிறப்பு வளவாளராக கிழக்குபல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளையின் கிழக்குப் பிராத்திய பணிப்பாளருமான எஸ்.எஸ் அமல் கலந்து கொண்டு மேற்படி விரிவுரை வழங்கினார்.

முற்றிலும் இலவசமாக இடம்பெற்ற இவ் வழிகாட்டல் கருந்தரங்கில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment