இது எந்த வீதி என்று சொல்ல முடியுமா?

beach rd night– M16

காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியைத் தவிர உள்ளக வீதிகள் அனைத்தும் குழிகளும், கற்களும் கொங்கிரீட் சிதைவுகளையும் பகற்பொழுதுகளில் எமது கண்களுக்குத் தெரியுமளவுக்கு ஊகித்துப் பயணிக்க முடிகிறது. புதிதாக வாங்கிய வாக னங்கள் ஒரு மாதத்தில் ஒலி எழுப்பும் நிலை இவ்வாறான வீதிகளால் ஏற்படுகிறது.

அதிலும், இவ்வீதிகளில் பயணிப்போர் இரவு வேளைகளில் பலர் விழுந்து எழுந்து செல்லும் நிலைமைகளும் ஏற்படுவதும் எமது வீதிகளின் தனிச் சிறப்புக்கள்.

இவ்வாறிருக்க, இரவு வேளைகளில் உள்ளக வீதிகளில் காணப்படும் அநேகமான மின் விளக்குகள் ஒளிராமல் இருப்பதுடன், பொது மக்களால் சம்பந்தப் பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டப்படாமலும் கவனிப்பாரற்றும் காணப்படுகின்றன.
 
‘தரமற்ற   மின் விளக்குகள் மின் கம்பங்களில் பொருத்தப்படுவதாலேயே அடிக்கடி மின் குமிழ்கள் செயலிழக்கின்றன’ என பொதுமக்களில் பலர் கூறுகின்றனர்.

இப்புகைப்படங்கள் காத்தான்குடியின் இதயப் பகுதியாகக் கருதப்படும் கடற்கரை வீதியாகும்.

மெயின் வீதியின் குட்வின் சந்தியின் வெளிச்சத்தையும்,  கடற்கரை வீதியில் மூடப்படாமல் இருக்கும் சில கடை வெளிச்சத்தையும் தவிர இருள்சூழ்ந்த  ஓர் காட்டுப் பாதையை ஞாபகப்படுத்திச் செல்கிறது.

ஆங்காங்கே ஒழுங்கின்றி வீதி விளக்குகள் எரிந்தாலும், ஓர் வீதிக்கு போதுமானதாக மின் விளக்குகள் அமையவில்லை.

ஓர் வீதியில் ஒரு மின்கம்பத்தில் மாத்திரம் குருட்டு வெளிச்சத்தில் ஓர் மின் விளக்கு சிரமத்துடன் எரிவதையும் இன்னும் சில இடங்களில் காண முடிகிறது.

மக்களுக்கு விளிப்பு அவசியம். சம்பந்தப்பட்டவர்களுக்கு கடமையுணர்வு அவசியம் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

 

beach rd night

beach rd1

Published by

Leave a comment