தோணா கால்வாயின் மேல் நவீன முறையில் கட்டப்படும் பாத்திமா பாலிகா வித்தியாலயக் கட்டடம்

fathima8– விசேட நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் இரண்டாவது தோணாக் கால்வாய் என அழைக்கப்பட்டு கடற்கரை வீதியைக் குறுக்கறுத்து, அஸ்லம் காணிக்கருகாமையில் செல்லும் நீரோடைக்கு மேல் புதிய சிந்தனையில் கட்டப்பட்டுவரும் இக்கட்டடம் புதிய காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்குரியது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் இக்கட்டடம் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. இடப் பற்றாக்குறையின் காரணமாக கொங்கிரீட் தூண்களை ஸ்திரமாக எழுப்பி அதாவது ஓர் பாலத்தினை அமைப்பது போல் தோணாக் கால்வாயின் மேல் அழகாக இக்கட்டடம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு இரண்டு வகுப்பறைகள் தற்போது அமைக்கப்பட்டு பாடங்கள் இடம்பெற்று வருவதாகவும், விரைவில் மேல் மாடி கட்டப்பட்டு மேலும் வகுப்புக்கள் அதிகரிக்கப்படவிருப்பதாகவும் இப்பாடசாலையின் அதிபர் ஜனாப் எம். யூனுஸ் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment