காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள காத்தான்குடி வரலாற்றின் இரண்டாவது தோணா கால்வாயாகக் கருதப்படும் அஸ்லம் காணிக்கு முன்பாக அமைந்துள்ள இக்கால்வாய் பாலம் தற்பொழுது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடற்கரை வீதி ‘காபட்’ வீதியாக மாற்றியமைக்கப்பட்டதிலிருந்து மெது மெதுவாக இத்தோணா கால்வாயின் கடற்கரை வீதிப் பாலம் திருத்தப்பட்டு மீளமைக்கப்பட்டு வருவதால், பிரயாணிகள் தற்பொழுது அதன் இருபக்கத்திலுமுள்ள மாற்று சிறு பாதைகளை உபயோகித்து வருகின்றனர்.
கடற்கரை வீதியின் மத்திய பகுதியில் இவ்வேலைகள் இடம்பெறுவதால், வைத்திசாலைக்கான போக்குவரத்துக்கள், காத்தான்குடி மத்திய கல்லூரி, அல் அமீன் வித்தியாலயம் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் கடற்கரை வீதியால் நேரடியாகச் செல்ல முடியாமல் உள்ளது. பாதசாரிகளுக்கும் இவ்வீதியூடாக ஊடறுக்க முடியாது.
காத்தான்குடியில் மாரி காலத்தில் ஏற்படும் மழை நீரோட்டத்திற்கு இக்காலவாய் இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், இதன் வேலைத் திட்டங்கள் மிக அவதானத்துடன் இடம்பெற்று வருவதுடன் மிக விரைவில் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்படும் எனவும் இவ் அபிவிருத்திக் குழுவினர் தெரிவித்தனர்.

Leave a comment