காத்தான்குடி:1990ம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வைத்து ஒரே நாளில் கடத்தி கொலை செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 68 முஸ்லிம்கள் புதைக்கப்பட்ட இடத்தினை தோண்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழவின் தலைவர் எம்.பராக்கிரம பரணகம கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கிடம் தெரிவித்தார்.
கடந்த (3.2.2014) திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்பலி பாறூக் தலைமையிலான முஸ்லிம் பிரமுகர்கள் குழுவொன்று காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழவின் தலைவர் எம்.பராக்கிரம பரணகமவை சந்தித்தத போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடியையும் அதனை சூழவுள்ள கிராமங்களிலிருந்தும் காணாமல் போன கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் சேகரிக்கப்பட்ட 112 பேரின் விண்ணப்பங்களையும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வின் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் உட்பட்ட முஸ்லிம் பிரமுகர்கள் குழுவொன்று காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு 29.11.2013 அன்று அதன் தலைவர் உட்பட்ட உயர்மட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நேரடியாக கையளித்தது.
அத்தோடு காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை ஆராய்ந்து அவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும் இடங்களை கண்டறிவதனூடாக அவர்களுடைய உடல்களை அல்லது எச்சங்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி மீண்டும் அடக்கம் செய்வதற்கு உதவ வேண்டும்.
இரண்டாவதாக அவ்வாறு காணாமல் போனோர் சம்பந்தமான ஆவணங்களை பரிசீலித்து அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அல்லது இதுவரையில் காணாமல் போனோராக இருந்தால் அவர்களுடைய குடும்பங்களுக்கு போதியளவான நஷ்டஈட்டை கொடுக்க வேண்டும்.
மூன்றாவது தோண்டி எடுக்கப்படுகின்ற முஸ்லிம்களின் உடல்களை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தி சர்வதேச ரீதியாக யுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இன்னுமொரு சமூகம் வட கிழக்கிலே வாழ்ந்த முஸ்லிம்கள் என்பதை தெரியப்படுத்துவதனூடாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சர்வதேசமயப்படுத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இதனடிப்படையில் ஆணைக்குழுவின் தலைவருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தலைமையிலான முஸ்லிம் பிரமுகர்கள் குழுவுக்குமிடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை (3.2.2014) இடம் பெற்ற போதே 68 முஸ்லிம்கள் புதைக்கட்ட இடத்தினை தோண்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் பரணகம முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட புதைகுழிகளை தோண்டுவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும்,உடல்களை அடையாளம் கண்டுகொள்ளுமுகமாக நெருங்கிய உறவினர்களின் வாக்கு மூலத்தை பெறுவதோடு அவர்களுடைய இரத்த மாதிரிகளை பெற்று மரபனு பரிசோதனைகளினூடாக உடல்களை அடையாளம் காண்பது என்றும் அதற்காக நெருங்கிய உறவினர்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் காணாமல் போனோரின் விபரங்கள் சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற மொத்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் 5000 ஆக இருக்கலாம் என்றும் சரியான தொகையினை மிக விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் இது வரை கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் இதற்கான விசாரனைகளை குறிப்பிட்ட பிரதேசத்திற்கு ஆணைக்குழு நேரடியாக விஜயம் செய்து விண்ணப்பங்களுடைய உறவினர்களை விசாரிப்பதனூடாக அவர்களுக்குரிய நஷ்டஈட்டுக்குரிய முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் கூறினார்.
விசாரணைகள் முடிந்ததன் பின்பு முஸ்லிம்களில் காணாமல் போனோரின் இழப்புகள் சம்பந்தமான பூரண ஆவணத்தை சர்வதேசத்திற்கு வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு காத்தான்குடி மற்றம் காத்தான்குடியை சூழவுள்ள கிராமங்களிலிருந்து காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை திரட்டி காணாமல் போனோர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நடவடிக்கை எடுத்திருந்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு காத்தான்குடி,காத்தான்குடியை சூழவுள்ள கிராமங்களிலிருந்து காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை திரட்டி காணாமல் போனோர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நடவடிக்கை எடுத்திருந்தார்.
அதற்கு அடிப்படை காரணமாக இருந்த விடயம் ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டு ஓரிரு மாதங்கள் கழிந்ததன் பிறகு கூட முஸ்லிம்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களோ,பொது நிறுவனங்களோ,அரசியல் தலைமைகளோ,சிறிய அரசியல் குழுக்களோ எவ்விதமான முன்னெடுப்புகளையும் எடுக்காத நேரத்தில் இது சம்பந்தமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற ஓர் காலத்தின் கட்டாயம் ஏற்பட்டதன் காரணமாகவும், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு சொல்லுமுகமாகவும், காணாமல் போனோரில் கணிசமான எண்ணிக்கையினர் முஸ்லிம்களில் இருக்கின்றனர் என்பதை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கௌரவ பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்கள் இதனை பள்ளிவாயல்களினூடாகவும்,இணையத்தளங்களின் ஊடாகவும்,பத்திரிகைகளின் ஊடாகவும்,இதற்கான தகவல்களை சேகரித்து ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்காக முயற்சிகளை மேற்கொணடு அந்த விபரங்களையும் விண்ணப்பங்களையும் குழுவுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by
![DSC00810[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dsc008101.jpg?w=150&h=112)
![DSC00722[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dsc007221.jpg?w=780&h=585)
![DSC00810[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dsc008101.jpg?w=780&h=585)
![DSC00746[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dsc007461.jpg?w=780&h=585)
Leave a comment