சூரிஜ்: சுவிட்ஸர்லாந்தில் வசித்து வரும் இலங்கையரான திரு. காமில் இஸ்ஸடீன் அவர்கள் சூரிச் பொலிஸ்மா அதிபர் றிச்சர்ட் வொல்ப் அவர்களை சந்தித்து அரசியல் சம்பந்தமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இஸ்ஸ டீன் அவர்கள் இலங்கையில் தனது கல்வியை பூர்த்தி செய்துவிட்டு சுவிஸ்ஸர்லாந்தில் தற்போது நீதி ஆலோசகராகவும், சுகாதார ஆலோசகராகவும் சேவையாற்றுகிறார். மேலும் 2011ம் ஆண்டு சுவிஸ்ஸர்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் இலங்கையர் என்ற பெறுமையும் இவரையே சேரும். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09ந் திகதி நடைபெறவிருக்கும் சூரிஜ் மாநில தேர்தலில் இவர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
சூரிச் பொலிஸ் மா அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட இஸ்ஸடீன் அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமை பற்றி கலந்துரையாடியுள்ளார். மேலும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்குப் பின் இலங்கை கண்டுள்ள அபிவிருத்தி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து கலந்துரையாடியுள்ளனர். மேலும் இலங்கையில் ஏற்படும் துரித அபிவிருத்திகளை சகிக்க முடியாத சிலரே உலக நாடுகளின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்;படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பதை இச்சந்திப்பின் போது இஸ்ஸடீன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கொடூர யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவுக்குகொண்டுவந்ததன் பின்பு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சகல சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது மட்டுமல்லாமல் இலங்கை மக்கள் ஜாதி, மத குல பேதமின்றி ஓரு தாய் வயிற்று பிள்ளைபோல் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள இஸ்ஸதீன் அவர்கள் இவ்வுண்மையை நேரில் வந்து பார்வையிடுமாறு ரிச்சட் வெலப் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் தம் தாய்நாட்டுடன் வைத்திருக்கும் உண்மையான அன்பு மற்றும் நாட்டுப்பற்று என்பவை இதன் மூலம் வெளிப்படுவது மட்டுமல்லாமல் இஸ்ஸதீன் அவர்கள் தற்போதும் எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஏற்படும் அவப்பெயர்க்கு இடமளிக்கமாட்டார் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
Published by

Leave a comment