காத்தான்குடி: ஈராண்டு கடந்த தங்களது வெற்றிப் பயணத்தில் நாங்களும் கலந்து பாராட்டுக்களைத் தெரிவிப்பது தங்களை மேலும் உத்வேகப்படுத்தும் என கருதுகின்றோம்.என OSA அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.
நம் சமூகத்துக்கான தனியானதொரு ஊடகத் தாகத்துக்கு மத்தியில் ஏதோ ஒருகோணத்தில் நின்று சமூதாய இலக்கு என்ற உங்களது சார்பில்லாத இணையப்பயணம் வெறும் 700 நாட்களுக்குள் இத்தனை இதயங்களை கொள்ளை கொள்ள வைத்திருக்கிறது.
இது ஊடகத்துறையைப்பொறுத்த வரையில் இமயத்தில் இழைத்து இழைத்து ஏறிய கதைதான்.
அரியணை மகுடிகளுக்கு மட்டும் ஆடிப்போகும் பாம்பாக இராது சமூகசேவையாளர்கள் படைப்பாளர்கள் கல்வியலாளர்கள் என்று பலரையும் அணைத்து இணைத்துப் போகின்ற போக்கே தங்களது வெற்றியின் ஏணிகளாகும்.
இவ்வாறான நிலைப்பாடு சமூகத்தில் பல சாதிப்பாளர்களை சிருஷ்டித்துத் தரும்
சூடான தகவல்களைத் வழங்குகின்றீர்கள் என்று வாழ்துவதை விடவும் சமூக்துக்கான சத்தான செய்திகளைத் தேடிப்பிடித்து தருகின்றீர்கள் என்பதுதான் பாரட்டுக்குரியதாகும்.
இவற்றுக்கப்பால் சமூகசமய நிறுவனங்களினது தரவுகளை சேமித்து வைப்பதும் முதன்மைப்பாராட்டுக்குரியவைகளாகும்.
இவ்வாறான செயல்பாடுகளுக்காக தங்களது யுயர் காத்தான்குடிஇணையம் வளர்ந்தோங்கி பல சாதிப்பு அடைவுகளை எட்ட வேண்டும் என பிரார்தித்து பணிப்பாளர் உள்ளிட்ட பிராந்திய செய்தியாளர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என இல்மி அஹமட் லெவ்வை மெலும் தெரவித்தார்.
Published by

Leave a comment