மட்டக்களப்பு: ஆசிய மன்றத்தினால் வடக்கு ,கிழக்கு தென், ஊவா, மத்தி ஆகிய ஐந்து மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயார் செய்துகொள்ளும் மூன்று நாள் செயலமர்வு மட்டக்களப்பு சின்ன உப்போடை ‘ஈஸ்ட் லகூன்’ நட்சத்திர ஹோட்டலில் 06-02-2014 நேற்று வியாழக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் போது இந்த மூன்று நாள் செயலமர்வினை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யு.பி.பி.ஜி விக்ரமசிங்க ஆகியோருக்கும் ஆசிய மன்றத்தின் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான ஒரு தொகுதி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
இச்செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யு.பி.பி.ஜி விக்ரமசிங்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் கபீர், ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி ரி.கோபாகுமார் கே தம்பி, அதன் பிரதிப்பணிப்பாளர் ஏ.சுபாகரன், வடமகாண முதலமைச்சின் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, தென்மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி திலக்க குடாச்சி, மத்திய மாகாண முதலமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஏ.குமார கமகே , ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகளான இப்திகார் றிஸாட்,வலீத் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு தென், ஊவா, மத்தி ஆகிய மாகாணங்களிலுள்ள மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மட்டக்களப்பு மற்றும் கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய மாநகர சபைகளின் ஆணையாளர்கள் ஆசிய மன்றத்தின் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மூன்று நாள் இடம்பெறவுள்ள இச்செயலமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் தயார் செய்யப்படவுள்ளதாக ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.எஸ்.இப்திகார் றிஸாட் தெரிவித்தார்.
ஆசிய மன்றம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு தென், ஊவா, மத்தி ஆகிய 5 மாகாணங்களில் இந்த பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலமர்வு நாளை சனிக்கிழமை பிற்பகலுடன் நிறைவு பெறும்.
Published by



Leave a comment