66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓட்டமாவடி கிளையின் மனித நேய இரத்த தான முகாம்

2[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: இலங்கை நாட்டின் 66வது  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஓட்டமாவடிக்கிளையும், ஜமாத்தே இஸ்லாமியின் ஓட்டமாவடி மன்றமும் இணைந்து மனித நேய இரத்ததான நிகழ்வினை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் வித்தியாலயத்தில் சுதந்திர தினத்தன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய ஊழியர்களினால் இரத்தம் பெற்று கொள்ளபட்டதுடன்   இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஊழியர்களும், ஜமாத் உறுப்பினர்களும்,விசேட பாதுகாப்பு அதிரடிப்படையினரும், ஓட்டமாவடி பொலிஸ் படையினரும், பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.

இந் நிகழ்வு சிறப்பே நடைபெற உதவிய நல் உள்ளங்களுக்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலை வைத்திய குழுவினர்களுக்கும்  இந் நிகழ்வில் இரத்த தானம் வழங்கிய பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினகளுக்கும்,ஜமாஅத் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றது என அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10[1]

blood

2[1]

Published by

Leave a comment