கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்திருக்கின்ற உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு

kalkudah– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாhரண தரப் பரீட்சை  எழுதிய மாணவர்களுக்கும் ,வேலை செய்பவர்களுக்கமான ஓர் அரிய சந்தர்ப்பம்! உங்களுக்கான பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லையா?கவலையை விடுங்கள்!

 நீங்களும் நாளைய உலகின் பட்டதாரியாகலாம். அரச, தனியார் துறைகளில் பலர் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள காரணமாகவிருக்கும் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகமான காமராஜ் பல்கலைக்கழகமான மிக விரைவான முறையில் பட்டதாரிகளை வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய  கல்குடா மண்ணில் முதல் முறையாக இளைஞர்களின் உள்ளத்துணர்வுகளை அறிந்து, கல்குடா மீடியா போரம் ஏற்பாடு செய்திருக்கின்ற உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உங்கள் பட்டப்படிப்பை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பான பெறுமதி வாய்ந்த வழிகாட்டல் செயலமர்வு முற்றிலும் இலவசமாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை 08.02.2014ம் திகதியன்று ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் மாலை 3.00மணி தொடக்கம் 5.00மணி வரை இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே காலத்தின் அருமை கருதி உயர்தரம் எழுதிய அனைத்து மாணவ மாணவிகளையும்இபட்ட மேற்படிப்பினைத் தொடரவிரும்பும் பட்டதாரிகளையும் கலந்து பயன் பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்

இதில் இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களும் இச்செயலமர்வில் கலந்து கொள்ளமுடியும் எனவும் இது தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு 0778327822 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு கல்குடா மீடியா போரத்தின்  பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீம்.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

Published by

Leave a comment