ஊடகத் துறைக்குள் வந்து
ஊன்றியே கால் பதித்து
தேடியே செய்தி தன்னை
திக்கெட்டும் திரட்டித் தந்து
ஈடிலாச் சேவை செய்து
இதயத்துள் இடம் பிடித்த
வாடிடா இணையத் தளமே
வாழ்த்தினேன்.. யுவ காத்தான்குடியே..!
******************
ஆண்டுகள் இரண்டு தன்னை
அமைதியாய் கடத்தி விட்டாய்..
நீண்டது உந்தன் பயணம்
நினைவுகள் மீட்டிப் பார்த்தேன்
தாண்டிய தடைகள் சொல்ல
தனியொரு ஏடு வேண்டும்
வேண்டினேன் இன்னும் வளர
விருப்பமே.. யுவ காத்தான்குடியே..!
*********************
உலகுக்கே செய்தி சொல்லி
ஊருக்குப் பெருமை சேர்த்தாய்..
பலமிக்க ஊடகம் என்னும்
பட்டத்தைப் பெற்றுக் கொண்டாய்..
இலக்குகள் இன்னும் உண்டு
இமயம் நீ காண வேண்டும்..
துலங்கிட வாழ்த்துச் சொன்னேன்
துணிவுதான்.. யுவ காத்தான்குடியே..!


Leave a comment