லண்டன் சுரங்க ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: இலட்சக்கணக்கான பயணிகள் திண்டாட்டம்

london– MJ

லண்டன்: கடந்த இரு நாட்களாக லண்டன் சுரங்கப்பாதை (Underground/Tube) ரயில் ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தால்  லட்சக்கணக்கான மக்கள் தங்களது போக்குவரத்தை தொடர்வதில் திண்டாடி வருகின்றனர்.

உலகின் வாகன நெரிசல் மிக்க பிரதான நகரங்களில் ஒன்றான லண்டனில் தினமும் மில்லியன் கணக்கான மக்கள் சுரங்க இரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

_72765776_tube2

சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் எம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக நுணுக்கமாக அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்துக்கள் லண்டன் வாழ் மக்களுக்கு இன்றியமையாதவை.

_72765471_tube1

புதன் கிழமை காலையில் வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் இப்போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால்  அன்றாடம் இத்தகைய நிலத்தின் கீழான சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்தை நம்பி இருக்கும் பல இலட்சம் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர.

london

இந்த போராட்டத்தால் சாதாரண ரயில் போக்குவரத்திலும்இ பஸ் போக்குவரத்திலும் அதிகளவான மக்கள் இடநெரிசலைத் தாண்டி பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 950 ஊழியர்களின் வேலைகள் பறிக்கப்படுவதைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசைகளையும் ஆங்காங்கே காண முடிகிறது.

_72765469_photo

இது தவிர, இங்கிலாந்தில் பெய்து வரும் பலத்த தொடர் மழை காரணமாக ஏற்கனவே சில ரயில் மற்றும் பஸ் போக்குவரத்துக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

_72763477_bfsbhvwicaapgtj

Published by

Leave a comment