-டீன் பைரூஸ்-
கொழும்பு: பல்வேறுபட்ட தடைகள், சவால்களுக்கு முகம் கொடுத்து தனது இரண்டாவது ஆண்டின் பூர்த்தியினைக் கொண்டாடும் யுவா்காத்தான்குடி இணையத்தளத்திற்கு தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் “மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான” தாஜூல் மில்லத் கௌரவ அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்கள்.அவர் மேலும் தெரிவிக்ககையில் ……………………………..
ஊடம் என்பது சக்தி மிக்கது. அதன் யதார்த்தத்தை இன்று முழு உலமும் அறிந்து கொண்டுள்ளது. அது மாத்திரமின்றி இலத்திரணியல் மூலமான ஊடகப் பணி செய்வது என்பது மிகவும் பாரிய பணியாகும்.
ஊடகம் என்பது ஒரு அமாணிதமாகும்.அந்த வகையில் பொறுப்பு மிக்க ஊடகப்பணியினை மிகவும் சிறப்பாக, திறமையாக,பக்கச்சார்பின்றி செயல் பட்டு வரும் யுவர்காத்தான்குடி இணையத் தளம் இலங்கை நாட்டின் சுதந்திர தினமான (04.02.2014) இல் தனது 2 வது ஆண்டினை அடைந்திருப்பதினை இட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் யுவா்காத்தான்குடி இன் பனி தொடரவும், இணையத்தளத்தின் ஆசியர் குழாம், பிராந்திய செய்தியாளர்கள், என சகலருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
Published by

Leave a comment