தனவந்தர்களின் தாராளத் தன்மையும்…பள்ளிவாயல்கள்,சம்மேளன உறுப்பினர்களின் உயா்வான உழைப்பும்.கூட்டு ஸக்காத் பயனாளிகள் நன்றி தெரிவிப்பு

-டீன் பைரூஸ்

DSC00086காத்தான்குடிகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அதன் கூட்டு ஸக்காத் நிதியத்தின் அயராத உழைப்பின் காரணமாக பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் யாவும் உரிய முறையில் கிடைக்கப்பட்டதனால் மக்கள் தனது நன்றிகளை  தெரிவித்துக் கொண்டனர்.

வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய பாரிய சமூகப்பணியினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செய்து வருகின்றதாக மக்கள் பாராட்டினர்.

DSC00027

காத்தான்குடி சம்மேளன கூட்டு ஸக்காத் நிதியத்தின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் AM சாதிக்கீன் JP கூறுகையில்…….

இம்முறை 2013 மொத்த ஸக்காத் நிதியாக  கிடைக்கப் பெற்றது. 16177000/=.

350 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை. 15385000/=.
ஏப்ரலில் (சித்திரை வியாபாரம்) கிடைக்க இருப்பது    35 or 40 இலட்சம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்பார்க்கப்படுவது சுமார் 2 கோடி ரூபாய் என தெரிவித்தார்.

Published by

Leave a comment