சிட்டகங்: பங்களாதேசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது 34வது சதத்தை அடித்து கவாஸ்கர் மற்றும் லாரா ஆகியோரது சாதனையை சமன் செய்திருக்கிறார் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வீரர் குமார் சங்ககார.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இலங்கை- வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இந்த போட்டி சங்ககாராவின் 122வது டெஸ்ட் போட்டியும் 208வது இன்னிங்ஸும் ஆகும். இன்றைய டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தமது 34வது சதத்தை நிறைவு செய்தார் சங்ககார.
இதற்கு கவாஸ்கர், லாரா ஆகியோர் 34 சதங்களை அடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்தோர் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தனர்.
இந்த 5வது இடத்தில் இன்றைய சதத்தின் மூலம் சங்ககாராவும் இணைந்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்தோரில் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment