100 பிள்ளைகள் வேண்டி பெண்கள் பலாத்காரம்: சிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறை

abuse2_1633504c[1]– s-90

ஹராரே: அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ரோபர்ட் மார்டின் கும்புரா (57). ஏற்கனவே மணமான இவருக்கு 11 மனைவிகளும், 30 குழந்தைகளும் உள்ளனர்.

100 குழந்தைகள் பெற்று சாதனை புரிய விரும்பியுள்ளார் ரோபர்ட்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மீது நான்கு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ரோபர்ட் மீது பாலியல் பலாத்கார வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹோசக் முஜாயா குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ரோபர்ட்டுக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

Published by

Leave a comment