காத்தான்குடி:இலங்கை நாட்டின் 66 வது சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டினில் நகர முதல்வர் அல்ஹாஜ். SHM அஸ்பர் JP தலைமையில் காத்தான்குடிஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தினில் நடைபெற்றது.
இலங்கையின் சுதந்திரப் போராட்டத்திற்காக முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு என்ன என்ற தொனிப் பொருளில் விசேட உரை ஒன்றினை நிகழ்த்தினார்கள் காத்தான்குடி ஜாமிஜயதுல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,ஆசிரிய ஆலோசகருமான அஷ்ஷெய்ஹ் MI அப்துல் கபுர் (மதனி) BA அவர்கள்.
இந்நிகழ்வினை முன்னிட்டு கா்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் நகர முதல்வரின் ஏற்பாட்டினில் வழங்கப்பட்டன. மேற்படி பொதிகள் யாவும் சுதந்திரதின நிகழ்விற்காக வேண்டி சமூகமளித்திருந்த கௌரவ அதிதிகளினால் தாய்மார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
Published by







Leave a comment