சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சொற்பொழிவு நிகழ்வும் நோயுற்றவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும்

photo_3[1] – MTM.அஸ்மி தாஜூதீன்

காத்தான்குடி: இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வு இன்று நாடு பூராகவும் கொண்டாடப்பட்டது 

ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட சொற்பொழிவு நிகழ்வு மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயலில் ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் நாசிம் இப்றாஹிம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் விசேட சொற்பொழிவினை பிஸ்மி பாடசாலையின் விரிவுரையாளர் அஸ்ஸெய்க் MSM. நுஸ்ரி (நளீமி)   அவர்களினால்  இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றி விசேடமாக குறிப்பிட்டு உரையாற்றினார்.

அத்துடன் 66வது  சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜமாஅத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது  நிகழ்வான நோயுற்றவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் னுஆழு திருமதி மோகனாவதி தலைமையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஜமாஅத்தின் குறிக்கோள்கள் பற்றி காத்தான்குடி மன்றத்தின் நாசிம் இப்றாஹிம் ஆசிரியரினால் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதோடு தமிழ் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் அவசியம் பற்றி  ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் தர்பியா பிரிவின் பொறுப்பாளரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியருமான னுச.அயாஸ் அவர்களினால் வலியுறுத்தி உரையாற்றப்பட்டது.அதன் பின்னர் நோயுற்றவர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வுகளில் ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்தின் உறுப்பினர்களான Dr.ஹாதி, Dr.சில்மி, சம்மேளன செயலாளர் றமீஸ் மௌலவி, சம்மேளன  உப செயலாளர் ஜௌபர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

 

photo_3[1]

photo_4[1] (2) 

photo_4[1]

Published by

Leave a comment