காத்தான்குடி: காத்தான்குடியில் இன்று பல இடங்களில் 66 வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. காத்தான்குடி நகர சபையின் நிகழ்வு நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் ஹிஸ்புள்ளா மண்டபத்தில் இடம்பெற்றது.
மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் பிரதி நகர முதல்வர் ஜெஸீம் நகர சபை உறுப்பினர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் நகர சபை உத்தியோகத்தர்கள் உட்பட பெரும் திரளானோர் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வின்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்குப் பொதி வழங்கப்பட்டதுடன் சுதந்திரத்தினை பிரதிபலிக்கும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சுதந்திர நிகழ்வுகள் அதன் சி.பி காசிம் வீதியிலுள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது. நகர சபை உறுப்பினர்கள் சர்வ மதத் தலைவர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
அல் மனார் அறிவியியற் கல்லூரியின் நிகழ்வுகள்; அதன் பள்ளிவாயலில் இடம்பெற்றது.காத்தான்குடி ஐம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும் காழி நீதிபதியுமான எஸ் எம் எம் அலியார்(பலாஹி) உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்
ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையின் சுதந்திர தின மற்றும் சிரமதான நிகழ்வுகள் அதன் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றன மொனாஸ் ஆங்கில கல்லூரி மாணவர்களின் உதவியுடன் சிரமதானம் இடம்பெற்;து.. இதன் போது விN’ட தேவையுடைய மாணவர்களுக்கு மொனாஸ் ஆங்கில கல்லூரி அனுசரணையில் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
![DSCF6349[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf63491.jpg?w=150&h=112)
Leave a comment