போக்குவரத்து பொலிஸாருக்கு அறைந்ததால் உமர் அக்மல் கைதாகி விடுதலை!

52ecd0607b7cf[1]– SHM

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில்  அறைவிட்டதால்  கைதாகியுள்ளார். லாகூரில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறும் வகையில், உமர் அக்மலின் கார் இன்று லாகூரில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் 3 பேர் காரை தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த உமர் அக்மல் வேகாமாக காரை விட்டு இறங்கி ஒரு பொலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்து விட்டார். அத்தோடு நில்லாமல் அவரது சீருடையையும் கிழித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

52ecd0607b7cf[1]

ஆனால் அந்தக் காவலர் தான் தனது சட்டையை முதலில் பிடித்தார் என்று கூறியுள்ளார். ஆனால் அப்படி நடக்கவில்லை என்று பின்னர் பொலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அக்மல் கைது செய்யப்பட்டார்.

 இதன் பின்னர் உமர் அக்மலின் இரசிகர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து, பிணையில் சற்று முன்னர் உமர் அக்மல் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment