காத்தான்குடி: பிரதேச மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புள்ளா மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பாடசாலை அதிபர் ஐனாபா ஜெஸீமா முஸம்மில் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புள்ளா தனதுரையில்
அபிவிருத்தி என்பது வெறும் கட்டடங்களாலோ வீதி அமைப்பதாலோ அபிவிருத்தியடைந்து விட முடியாது தனி மனித வாழ்க்கையில் முன்னேற்றமேற்பட வேண்டும் வறுமையில் வாடும் குடும்பங்களை இனம்கண்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்யப்படவேண்டும் அம்மக்களை கல்வி ரீதியாக உயர்த்த பாடுபட வேண்டும் எமது பிரிவுகளில் அன்றாடம் சாப்பிட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பதாக நான் அறிகின்றேன் மாதாந்தம் மின்சாரக்கட்டணம்; செலுத்துவதற்கு கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பதாகவும் எனக்கு அறியக்கிடைத்துள்ளது.அத்தகைய குடும்பங்களின் விபரங்களை தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
குறைந்தது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலிருந்தும் 10 குடும்பங்களை அடையாளப்படுத்தித் தாருங்கள் அவர்களை வாழ்வாதார ரீதியாக உயர்த்த வேண்டியுள்ளது.அதி மேதகு ஐனாதிபதி அவர்கள் நாட்டுமக்களுக்காக அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்.அப்போதுதான் அடுத்த முறை அவர் ஐனாதிபதியாக வருவதற்கு மக்கள் ஆணை வழங்குவர்.அதேபோல் நானும் சேவை செய்தால்தான் என்னையும் அடுத்த முறை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்
எமது பிரதேசம் பல துறைகளிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் இந்த வகையிலேதான் உங்கள் காலடிக்கு நாங்கள் வந்து எவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டும் என்ன பிரச்சினைகள் உள்ளன என கேட்கின்றோம் என தெரிவித்தார்.பிரிவு ரீதியாக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்ததுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது விடயமாக முறையிடப்பட்டது
Published by
![DSCF6299[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf62991.jpg?w=150&h=112)
![DSCF6299[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf62991.jpg?w=780&h=585)

![DSCF6310[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/dscf63101.jpg?w=780&h=585)
Leave a comment