காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2014 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் எதிர் வரும் (04.02.2014 செவ்வாய்க்கிழமை) பி்ப.03.45 மணியளவில் தலைவர் என்.எம்.ஸாஹிர் தலைமையில் கடற்கரை ஸாஹிர் ரெஸ்ட் லேன்டில் நடைபெற உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்பந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட பல போட்டிகளில் தனது திறமைகளை காட்டி சாதனை படைத்து வரும் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகமானது பல சிரேஸ்ட,கனிஸ்ட வீரா்களைக் கொண்ட ஓர் சிறந்த கழகமாகும்.
மேற்படி கழகத்தின் 2014 ம் ஆண்டுக்கான சிறந்த புதிய நிர்வாக சபை ஒன்றினை தெரிவு செய்வதற்காக வீரா்கள் ஆவலுடன் உள்ளதாகவும் அறிய முடிகின்றது.
நடைபெறவுள்ள கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக மதிய போசன ஏற்பாடகளும் செய்யப்பட்டுள்ளதாக கழகத்தின் செயலாளர் தெரிவித்தார்.
Published by


Leave a comment