காத்தான்குடி: நேற்றிரவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் காத்தான்குடி நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் அலி சப்றியைத் தாக்கிய நபரைத் தேடி நேற்றிரவு முதல் தற்பொழுதுவரை பொலிஸார் வலைவிரித்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் அலி சப்றியைத் தாக்கிவிட்டு மறைந்திருக்கும் குறித்த நபரின் உறவினர்கள் சமாதான முயற்சிக்கு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்.
நிலைமை இவ்வாறிருக்க, தாக்குதலுக்குள்ளான அலி சப்றி தற்பொழுது உடல் நலம் தேறி வருவதாக காத்தான்குடி தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்கள் விரைவில்..
Published by

Leave a comment