காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் அலிசப்ரி நபர்ஒருவரினால் இன்று இரவு சுமார் 10.00 மணியழவில் தாக்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலைில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகர சபை உறுப்பினர் அலி சப்ரி புதிய காத்தான்குடியில் உள்ள தனது வீட்டுக்கு முன்னால் நின்ற சமயம் குறித்த நபர் மோட்டார் சைக்கிலில் வந்து அலி சப்ரியை தலைக்கவசத்தால் (HELMET) தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோட்டார் சைக்கில் மோதலின் காரணமாகவே மேற்படி தாக்குதல் இடம் பெற்றதாகவும் தகவல் தெரிவித்தனர். இத்தாக்குதலினால் அலி சப்ரியின் நெற்றியில் பலமான காயம் ஏற்பட்டு இரத்தக்காயங்களுடன் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தான் தாக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒரு மணித்தியாலம் சென்றும் கூட எனது முறைப்பாட்டினை அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் முறைப்பாட்டினை பதியவில்லை என காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் அலி சப்ரி கவலையுடன் தெரிவித்தார்.
தன்னை தாக்கிய நபருக்கு எதிராக பொலிசார் உடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலி சப்ரி தெரிவித்தார்.
விடயமறிந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக், நகர முதல்வர் SHM அஸ்பர், நகர சபை உறுப்பினர் HMM. பாக்கீர் ஆகியோர் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டனர்.
Published by





Leave a comment