சண்டிகர்: இந்த அமெரிக்கப் பெண் பயங்கர வித்தியாசமாக இருக்கிறார். அதை விட அவர் பூண்டுள்ள கோலம்தான் பயங்கர ஆச்சரியமாக இருக்கிறது. பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்ணான இவர், அமெரிக்காவின் பகட்டான வாழ்க்கையை அப்படியே தூக்கிப் போட்டு விட்டு, ஹரியானாவைச் சேர்ந்த ஒரு விவசாயியைய கட்டிக் கொண்டு அவர் வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து சந்தோஷித்து வருகிறார்.
எல்லாம் காதல்தான் காரணம்.. அதுவும் பேஸ்புக் மூலம் பிறந்த காதல்… அந்தக் காதல்தான் இன்று இந்திய விவசாயியுடன், அவரது வாழ்க்கையையும் சேர்த்து மணந்து கொண்டு இந்தியப் பெண்ணாகாவே மாறி போய் நிற்கிறார் அட்ரியானா பரேல் என்ற இந்த 41 வயதுப் பெண்.
இவரது காதல் கதையும், இப்போதைய திருமண வாழ்க்கையும் வியக்க வைப்பது இந்திய திருமண பந்தம், இந்தியப் பாரம்பரியத்தை நினைத்து சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
இத்தனைக்கும் அட்ரியானா ஏற்கனவே திருமணமாகி தனது கணவரைப் பிரிந்தவர். இவருக்கு 25 வயது மகளும் உள்ளார். ஆனால் முகேஷுடன் வாழ்வதற்காக மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை பிரிந்து வந்து விட்டார்.
இதுகுறித்து அட்ரியானா கூறுகையில், எனக்கு இந்த வாழ்க்கை நிறையவே பிடித்திருக்கிறது. முகேஷுடன் இருக்கும் நிமிடங்கள் சொர்க்கத்திற்குச் சமமானவை. இந்த வாழ்க்கையை இழக்கவே கூடாது என்று பிரார்த்தித்தபடி இருக்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
மாடுகளைக் கழுவி, சாணிகளை அள்ளி, வீட்டு வேலைகளையும் இந்திய விவசாயிகள் போல் இவர் செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment