பனியால் மீண்டும் உறைகிறது அமெரிக்கா: வாகனத்தில் பிரசவம், பட்டினியால் மக்கள் அவதி!

snow1– AF80

அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பனிப் புயலால் சாலைகளில் விபத்து ஏற்பட்டதுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் மணிக்கணக்கில் சாலைகளிலேயே இருந்துள்ளது.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநில தலைநகரான அட்லாண்டாவில் நேற்று முன்தினம் பனிப்புயல் வீசியது. இருப்பினும் பாடசாலைகள். கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. இந்நிலையில் பனிப்புயலால் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலங்கள் வழக்கத்தை விட முன்னரே மூடப்பட்டன. இதையடுத்து அனைவரும் வீடுகளுக்கு கிளம்பினர்.

நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் வாகன விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கஇ மறுபக்கம் ஒரு வாகனத்தின் மீது மற்றொன்று என்று ஏராளமான வாகனங்கள் ஏறி குவியலாக போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது.

snow

போக்குவரத்து ஸ்தம்பித்து வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணிநேரம் அதே இடத்தில் நின்றன. இந்நிலையில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட அவர் தனது கணவர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் உதவியுடன் காரிலேயே பெண் குழந்தையை பெற்று அதற்கு கிரேஸ் என்று பெயர் வைத்தார்.

சுமார் 20 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் பலர் காரிலேயே சாப்பிட்டு தூங்கியுள்ளனர். சிலர் கார்களை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். மேலும் சிலர் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இரவை கழித்துள்ளனர்.

ஊழியர்கள் பலர் அலுவலகங்களிலேயே இரவு நேரத்தில் தூங்கியுள்ளனர். குழந்தைகள் பள்ளிக்கு வெளியே மற்றும் பள்ளி வாகனங்களில் முகாமிட்டனர்.

snow1

வடகிழக்கு அட்லாண்டாவில் வசிக்கும் அகௌண்ட்ஸ் மேனேஜரான அவெர்ஸ் என்ற பெண் வழக்கமாக 30 முதல் 45 நிமிடத்தில் அலுவலத்தில் இருந்து வீட்டை அடைந்துவிடுவார். ஆனால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அவர் 22 மணிநேரம் கழித்து தான் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பனிப்புயல் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க மாட்டார்களாஇ இப்படி தான் மக்களை தவிக்க விடுவார்களா என்று ஜார்ஜியா ஆளுநர் மற்றும் அட்லாண்டா மேயர் உள்ளிட்ட அதிகாரிகளை மக்கள் சமூக வலைதளங்களில் திட்டிக் குவித்துள்ளனர்.

 

Published by

Leave a comment