இரு வருடங்களுக்கும் மேலாக இழுத்து மூடப்பட்டுள்ள காத்தான்குடி பொதுமைதானம்…

ground4– AK-77

காத்தான்குடி: காலையிலும் மாலையிலும் தினமும் சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களால் பயனடைந்து வந்த காத்தான்குடிக்கான ஒரே ஒரு பொது மைதானம்  கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சர்வதேச மைதான கனவில் இன்றுவரை இழுத்து மூடப்பட்டிருக்கின்றது.

1980களின் ஆரம்பத்தில் மர்ஹூம் டொக்டர் அகமட் பரீட் மீராலெப்பை (பா.உ) அவர்களால், காத்தான்குடி இளைஞர்களின் விளையாட்டு தேவையை கருத்திற்கொண்டு இம்மைதானம் அமைக்கப்பட்டது.

இவ்விளையாட்டு மைதானம் காத்தான்குடி இளைஞர்களின் குறிப்பாக வீளையாட்டு வீரர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரும் ஓர் மைதானமாகத் திழந்திருந்ததுடன், உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள், கிரிக்கட் சுற்றுப் போட்டிகள்   போன்ற நாட்டிற்கே  முன்மாதிரியான பல விளையாட்டு நிகழ்வுகள் இம்மைதானத்தில் இடம் பெற்றிருந்தமையும் வரலாறு.

காலையில் பஸார் அணிகள் என்றும் மாலையில் பாடசாலை மாணவர்களின் கழகங்கள் என்றும் பல நூறு இளைஞர்கள் தங்களது பொழுபோக்குகளை இம்மைதானத்தில் மகிழ்வித்துவந்தனர்.

ground2

இதனைவிட  உடற்பருமன் உடையவர்கள், ஆரோக்கிய நடை, ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றம் உடற் பயிற்சியாளர்களும் இம்மைதானத்தை தங்கள் ஆரோக்கியத்துக்காக ஈடுபடுத்தி வந்தனர்.

மாலை வேளையில் பொழுதைக் கழிக்கும் பெற்றோர்களும், தங்களது பிள்ளைகளின்  விளையாட்டை இரசிக்க மைதானத்தைச் சூழ்ந்து இருந்து மகிழ்ந்து வருவர்.

ground4

ஓர் சர்வதேச மைதானக் கனவில் மைதானம் விசாலமாக்கப்பட்டு, புற்களும் பயிரப்பட்டுள்ளன. பயிரிடப்பட்ட புற்கள் அறுவடைக்குத் தயாராக இருப்பது போல் பல நாட்களாக காட்சி தருகின்றன.  பார்வையாளர்கள் அரங்கில் எவ்வித மாற்றங்களையும் இதுவரை காண முடியவில்லை. பழைய பார்வையாளர் அரங்கும் அதன் பின்னர் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்குமே மைதானத்தில் இருக்கின்றன.

சர்வதேச மைதாம் எங்களுக்குத் தேவை இல்லை நாங்கள் விளையாட வேண்டும். மைதான புற்றரையில் உருண்டு புரள வேண்டும் என பல விளையாட்டு உள்ளங்கள் ஏங்கித் தவிப்பதையும் எம்மால் காண முடிந்தது.

இப்பகுதிகளிலுள்ள சிறார்கள் பலர் விக்டரி மைதானத்தை நோக்கியும்இ மையவாடிகளை நோக்கியும் விளையாடச் சென்று வருகின்றனர் எனவும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

வருடத்தில் இரு தடவைகளாவது நடாத்தப்பட்டு வந்த சிரேஷ்ட கிரிக்கட் தொடர்களும் தற்பொழுது இரு வருடங்களுக்கு மேலாக மைதான அபிவிருத்தி என்ற பேரில் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் விளையாட்டுக் கனவுகளும் வீரர்களிடமிருந்து நழுவிச் சென்றுள்ளன.

இரு வருடங்களுக்கும் மேலாக கவனிப்பாரற்று பாழடைந்து காணப்படும் காத்தான்குடி பொது மைதானம் ஒன்றில் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு திறக்கப்பட வேண்டும். இல்லையேல் விளையாடப் போதுமானதாக உள்ள தற்போதய நிலையில் விளையாட்டு வீரர்களுக்காக திறக்கப்பட வேண்டும்.

ground5

தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் பொது மக்கள் நலன்கருதி காத்தான்குடி பொதுமைதான விடயத்தில் அதிகூடிய அக்கறையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ground6

Published by

Leave a comment