ஹமில்டன்: இந்திய பந்து வீச்சாளர்கள் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக மூளையைப் பயன் படுத்த வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்’ என இந்திய அணித் தலைவர் டோணி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அத்துடன் ஒருநாள் போட்டித் தொடரையும் இழந்தது. இதனால் கடும் அதிருப்தியடைந்த அணித்தலைவர் டோணி, தோல்விக்கான முக்கியக் காரணமாக பந்துவீச்சாளர்களின் குறையை சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், இனி வரும் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு சிறப்பாக விளையாட வேண்டும் என அவர் அறிவுரையும் கூறியுள்ளார்.
‘நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இத்தொடரை இழந்துள்ளோம்’.
‘ஆனால் தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்த மூளையை அதிகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்’.
கடைசி நேரத்தில் ஓட்டங்களை வாரி வழங்குவதை பந்து வீச்சாளர்கள் நிறுத்தவேண்டும். புதுப்பந்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம்”என இவ்வாறு டோணி தெரிவித்துள்ளார்.
Published by
![dhoni-2401-ap_350_100312052735[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/dhoni-2401-ap_350_1003120527351.jpg?w=150&h=96)
Leave a comment