F.RAHMAN AHAMED
வரலாறு:கைபர் யுத்தத்திற்காக நபிகளார் அவர்களது தூதர்களுடன் வெளியேருகிறார். நீண்ட நேரம் கைபர் கோட்டையை முற்றுகையிடுகிறார்கள். எங்கிலும் வெற்றி பெற முடியவில்லை.
பின் நபிகளார் கூறினார்கள் ” நான் நாளை ஒருவருக்கு கொடியை கொடுப்பேன். அவரின் மூலம் இறைவன் வெற்றியைத் தருவான். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அதிகம் நேசிக்கக்கூடியவர். அவரையும் அவர்கள் விரும்புகிறார்கள் ”
யாருக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும் என்பதை இரவு முழுவதும் ஸஹாபாக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு இந்தக் கொடி கிடைக்கவேண்டும் என்று ஆசை வைத்தார்கள்.
அடுத்த நாள் நபிகளாரிடம் செல்கிறார்கள்.
நபிகளார் ” அலி இப்னு அபீ தாலிப் எங்கே ” எங்கே என்று கேட்டார்கள்.
அவர்கள் கூறினார்கள் ” அல்லாஹ்வின் தூதரே! அவர் கண்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அது அவர் பார்க்க முடியாதளவு அவரது கண்ணை மூடிவிட்டது. ”
அவரை நபித்தோழர்கள் நபிகளாரிடத்தில் கொண்டுவருகிறார்கள்.
நபிகளாருக்கு முன்னால் உட்காருகிறார்.
நபிகளார் அவரின் கண்ணைத் திறந்து அதில் துப்பினார்கள். பின்பு அவருக்காக துஆக் கேட்டார்கள். உடனே அவருடைய நோய் இதற்கு முன் இல்லாதது போன்று நீங்கிவிட்டது.
அவருக்கு நபிகளார் கொடியைக் கொடுக்கின்றார்கள்.
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள் ” அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்களைப் போன்று ஆகிவிடும் வரை அவர்களுடன் போரிடவா? ”
அதற்கு நபிகளார் கூறினார்கள் ” அவர்களுடைய மைதானத்துக்குச் செல்லும் வரை மெதுவாகச் செல்லுங்கள். பின்பு இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள். அவர்கள் இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளை கூறுங்கள். அல்லாஹ் மீது ஆணையாக இறைவன் உங்கள் மூலம் ஒரு மனிதனை நேர்வழி காட்டுவது உங்களிடத்தில் ஒரு சிவப்பு ஒட்டகம் இருப்பதை விடச் சிறந்தது. “
Leave a comment