-டீன்பைரூஸ்-
காத்தான்குடி:மாணவ சமூகத்திடம் போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மத்தி புநொச்சிமுனை இக்றா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தினில் அதிபர் ABM றசூல் (jp) SLPS தலைமையில் (28.01.2014 செவ்வாய்க்கிழமை) நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் திறன் விருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பஸீர் சேகுதாவுது MP அவா்கள் கலந்து கொண்டார்.உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் திறன் விருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் பஸீர் சேகுதாவுது MP அவா்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 75 ஆயிரம் ஒதுக்கீட்டு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நிகழ்வின் போது மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் மற்றும் கௌரவ அமைச்சர் சேகுதாவுது பஸீர் அவா்களின் இனணப்பாளர் கௌரவ அல் ஹாஜ் ULNMமுபீன் (JP) BA உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் பொது 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மல்டி போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக கதிரைகளும் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.





Leave a reply to jainulatheef Cancel reply