தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம் 2014

unnamedபஹ்மி யூஸூப்

திருகோணமலை: திருகோணமலை கல்வி வலயத்தின் குச்சவெளி கோட்டத்திற்குற்பட்ட அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2014ஆம் ஆண்டிற்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் வைபவம் கடந்த 2014.01.16ஆம் திகதி வியாழக் கிழமை பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஐ.சாஜிபு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தரம் 1 மாணவர்களின் பெற்றோர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இவ் விழாவில் குச்சவெளி பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர், திடீர் மரணவிசாரணை அதிகாரி, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர். இம்முறை தரம் 1 வகுப்புக்கு 75 மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment